To my loving mother on this Mother’s Day

என் அன்புள்ள அம்மா,

நான் நீ அழுது பார்த்ததே இல்லை.

அதனால் நீ கட்டாயமாக அழ வேண்டும் என்று நான் சொல்லவில்லை

அம்மா நீ விருப்பு-வெறுப்பற்றவள் என்று எனக்கு நண்றாக தெரியும்

ஆனால் இந்த சின்ன மனுஷியின் எண்ணம் என்னவென்றால் நீ உன் உணர்ச்சிகளும் இடம் கொடு

நீ அழுதால் நாங்கள் பாதிக்க படுவோமோ என்று கூட நீ நினைக்கலாம்

 

உனக்கென்று வாய்ழ்க்கையே இல்லையா?

எவ்வளோ நாள்தான் நீ உன் குழந்தைகளுக்காக மாடாய் உழைத்து ஓடாய் தெய்வாய்|?

உன் குழைந்தைகள் சந்தோஷம் தான் உன் சந்தோஷம் என்றால் உன் தனிப்பட்ட சந்தோஷம் தான் எங்கே?

உனக்கு கரும்பு சாறு மிகவும் பிடிக்கும்

இட்லி தோசையில் மிளகாய் [பொடி தடவி சாப்பிட்டால் பிடிக்கும்

பூங்காவில் அமைதியாக நடை பயிற்சி செய்ய பிடிக்கும்

வாரம் ஒரு முறை கோவில் செல்ல பிடிக்கும்

புடவைக்கு பொருத்தமான ரவிக்கை பிடிக்கும்

ஆனால் நீ எதுவுமே சொல்வதில்லை

எல்லாம் எனக்கு என்ன பிடிக்கும் என்றே வாழ்ந்து வருகிறாய்

என் முன்னேற்றத்துக்காக பாடு படுகிறாய்

என் சந்தோஷத்தில் நீ திருப்தி காண்கிறாய்

இந்த அன்னையர் தினம் அன்று நான் உனக்கு ஒரு பரிசும் கொடுக்க போவதில்லை

உன்னை புரிஞ்சிக்க முயற்சிக்கறேன்

சிக்கனமாக இருக்கிறேன்

எடையை குறைக்க முயற்சிக்கிகிறேன்

எல்லாத்துக்கும் மேலாக

நீயாய் ஏதாவது வாங்கி தரவேண்டும் என்று என்னை கேட்க ப்ராப்திக்கிறேன்

Leave a Comment