அவளின் சுதந்திரம்

அவள் சிறுமியாக இருந்தபோது சகோதரனுடன் கண்ணாம்மூச்சி ஆட்டம் விளையாடினாள்.

சகோதரனை கண்டுபிடித்து  விட்டாலும் கண்டுபிடிக்காததை போல் பாசாங்கு செய்வாள்.

அன்று ஆரம்பித்தது அவளுடைய விட்டுக்கொடுத்தல்.

 

ஆப்பிள் வாங்கினால்  அதை முதலில் அவள் அவசரமாக சுவைப்பாள்.

அம்மா அவளின் பேராசைக்கு திட்டுவாள்.

அதற்க்கு பதிலாக அவள் சொல்வாள்,

“அம்மா, ஆப்பிள் புளிக்கறதா என்று பார்த்தேன்.

எல்லோரும் சாப்பிட வேண்டும் இல்லையா?”

அதில் தெரிந்தது அவளின் பெருந்த்தன்மை.

 

 

பெரியவளானதும் அவளுக்கு நிறைய சாதிக்க வேண்டும் என்று ஆசை.

ஆனால் கொஞ்சம் நிதானமாகத்தான் வேலை செய்வாள்.

ஓட்டமாய் ஓடும் இந்த உலகில் அவளும் முன்னேற பார்ப்பாள்.

ஆனால் சில சமயங்களில் நெஞ்சில் இருக்கும் தென்பு உடலில இல்லாமல் போய் விடும்.

அதையும் தாண்டி அவள்  ஓட்டம் ஓடுவாள் தன்  குடும்பத்திற்காக.

 

அவள் சுதந்திரத்துக்காக பாடுபட்டாளா?

அவளின் சுதந்திரம் தான் என்ன.

பிறருக்காக வாழும் வாழ்க்கையில் அவள் அர்த்தம் கண்டால்  ஏன் சுதந்திரம் வேண்டும்?

வெளி உலகுக்கு அவள் குடும்பம்/நலம் விரும்பிகளுக்காக  அவள் கஷ்ட படுவது பெரிய விஷயமாக படுகிறது.

அதே சமயம் அவள் அதை கஷ்டமாக பார்ப்பதில்லை.

 

சின்ன வயதிலிருந்தே மற்றவரை பற்றி யோசிக்கும் பெண்களுக்கு!

வாழ்க்கையில் சுதந்திரம் என்பது மரபுகளையும் மீறிய ஒரு சிந்தனையா?

நெஞ்சில் கனம் இருந்தும் அதை வெளியில் புன்னகையால் மறைத்து விடும்  பெண்ணிற்கு,

ஒரு புத்தம் புது பூமி கிடைத்தால் அதை அவள் அனுபவிப்பாளா?

 

ஏனென்றால் அவள் பெருந்தன்மை, விட்டுக்கொடுத்தலுக்கு பழகி போனாள்.

அந்த “பெரிய பொறுப்பு” அவளை மேன்மைத்தான் படுத்தியது.

When you reach the higher levels of nobleness, everything else doesn’t impress you. Not necessarily a period.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Leave a Comment